வேலை பிளஸ் 2/ஐடிஐ/ டிப்ளமோ/ பட்டப்படிப்பு தகுதி

இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் (என்பிசிஐஎல்) காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அணு மின்நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் பயிற்சியளிக்கப்பட்டு அதன்பின் பணியில் அமர்த்தப்படுவதற்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

பிரிவு: 1.Stipendiary Trainees (Scientific  Assistant/B). மொத்த இடம்: 12

அ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங்: 6 இடங்கள். 

தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ.

ஆ. இயற்பியல்: 6. 


தகுதி: இயற்பியலை முக்கிய பாடமாகவும், வேதியியல் மற்றும் கணிதத்தை துணைப் பாடங்களாகவும் கொண்டு 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி., பிளஸ் 2விலும் கணிதத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

பயிற்சி காலம்: ஒன்றரை ஆண்டுகள். பயிற்சியின் போது ரூ.9,300 ஊக்கத் தொகை வழங்கப்படும்.

பிரிவு: 2.Stipendiary Trainees (Technician/B). மொத்த இடங்கள்: 26. 

அ. பிளான்ட் ஆபரேட்டர்: 6 இடங்கள். 

தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களில் தலா 50 சதவீத மதிப்பெண் களுடன் பிளஸ் 2 தேர்ச்சி. 10ம் வகுப்பில் ஆங்கிலத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

ஆ. எலக்ட்ரீசியன்: 2 இடங்கள். 

எலக்ட்ரானிக் மெக்கானிக் மற்றும் இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்-4 இடங்கள். இ. பிட்டர்- 14 இடங்கள்.

தகுதி: அறிவியல் மற்றும் கணித பாடங்களில் தலா 50 சதவீத மதிப்பெண் களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின் சம்பந்தப்பட்ட டிரேடில் 2 வருட ஐடிஐ. 10ம் வகுப்பில் ஆங்கிலத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

பயிற்சி காலம்: 2 ஆண்டுகள். பயிற்சியின் போது முதல் ஆண்டில் மாதம் ரூ.6,200 வீதமும், இரண்டாம் ஆண்டில் ரூ.7,200 வீதமும் ஊக்கத் தொகை அளிக் கப்படும்.

விண்ணப்பதாரர்கள் ஓஎம்ஆர் விண்ணப்ப படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தபால் மூலம் ஓஎம்ஆர் விண்ணப்பத்தை பெற வேண்டிய முகவரி: 


Assistant Manager (HRM),
Madras Atomic Power Station,
Kalpakkam- 603102.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.1.2014.
job Plus 2 / ITI / Diploma / Bachelor's degree eligibility

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post