இரயில்வே பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்


* பயணிகள் ரயில் கட்டணம், சரக்கு ரயில் கட்டணத்தில் மாற்றமில்லை.
* 17 கூடுதல் கட்டணம் கொண்ட பிரிமியம் ரயில், 38 புதிய விரைவு ரயில்கள் விடப்படும்.
* தீ விபத்தை தடுக்க ரயிலில் தீயணைப்பு கருவிகள் வைக்கப்படும்.
* ரயில் சமையலறையில் மின்சார அடுப்புகள் பயன்படுத்தப்படும்.
* குறிப்பிட்ட ரயில்களில் இணைய தளம் மூலம் உணவுக்கு முன்பதிவு செய்யலாம்.

* 2014-15ல் பயணிகள் பிரிவில் ரூ.45,300 கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பீடு.

* 2014-51ல் சரக்கு போக்குவரத்து பிரிவில் ரூ.1.06 லட்சம் கோடி வருவாய் கிடைக்க வாய்ப்பு.
* கூடுதலாக அதிவேக ரயில்கள் இயக்கப்படும்.

* சரக்கு ரயில்களுக்கான தனி பாதைகள் மூலம் செலவுகள் குறைந்துள்ளன.

* அதிவேக பயணிகள் ரயில்கள் இயக்கப்பட வேண்டியது அவசியம்.

* மேகாலாயா- அருணாச்சல்பிரதேசத்துக்கு ரயில் சேவை தொடங்கப்படும்.

* கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு அவசியம்.

* 6வது ஊதியக்குழுவின் பரிந்துரை நிறைவேற்றப்பட்டுள்ளன.

* 4,556 கி.மீ. நீளமுள்ள இருப்புப்பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.

* நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 56 கி.மீ பாதை அதிகமாக மின்மயமாக்கம்.

* அடுத்த 4 மாதங்களுக்கான ரயில்வே செலவினங்களுக்கு ஒப்புதல்.

* காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ரயில் பாதை
* ஜம்மு காஷ்மீரில் 11.2 கி.மீ. தூரத்திற்கு குகை பாதை

* ரயில்வேயை மேம்படுத்த உடனடியாக புதிய முதலீடுகள் தேவைப்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
15 நிமிடங்களில் முடிந்த பட்ஜெட் உரை
தெலங்கானா பிரச்னை காரணமாக ஆந்திர மாநில எம்.பி.க்களின் கடும் கூச்சல் குழப்பங்களுக்கு இடையே சுமார் 15 நிமிடங்களிலேயே மல்லிகார்ஜூன கார்கே தனது பட்ஜெட் உரையை முடித்தார். இதனையடுத்து அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post