மத்திய அரசின் உயர்கல்வித் துறையின் கீழ், ஆக்ராவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் "கேந்திரிய இந்தி சன்ஸ்தான்" கல்வி நிறுவனம் இந்தி படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தி ஷிக்ஷான் நிஷாந் (எம்.எட்.)
தகுதி
பி.ஏ. / பி.எஸ்சி. / பி.காம் போன்ற பாடங்களுடன் பி.எட். / எல்.டி படிப்பினை இந்தியில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
இந்தி ஷிக்ஷான் பரங்கத் (பி.எட்.)
தகுதி
பி.ஏ. / பி.காம். / பி.எஸ்சி. போன்ற படிப்புகளில் ஏதேனும் ஒன்றை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலம் பெற்றிருக்க வேண்டும்.
இந்தி ஷிக்ஷான் பிரவீன்
தகுதி
பிளஸ் 2வில் 50 விழுக்காடு மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாணவர்களின் சேர்க்கை நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடைபெறும். சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு மாதம்தோறும் 2000 ரூபாய் படியாக வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் பெறுவதற்கான இறுதி நாள்: 28 பிப்ரவரி 2014.
விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதி நாள்: 31 மார்ச் 2014.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.hindisansthan.org என்ற இணையதளத்தைக் காணவும்.
Tags
kalvi news