மடிக்கணினியை பிரித்துப் பொருத்திய பள்ளி மாணவிக்கு டாக்டர் பட்டம்

கோவை: மடிக்கணினியை பிரித்துப் பொருத்திய கோவை தனியார் பள்ளி 4ம் வகுப்பு மாணவிக்கு, லண்டன், "வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் பல்கலை.," டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்து உள்ளது.
கோவை சாயிபாபா காலனியைச் சேர்ந்தவர், பிரபு மகாலிங்கம். இவருடைய 10 வயது மகள் ஆதர்ஷினி. இவர் கோவை இந்தியன் பப்ளிக் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இம்மாணவி, 15 நிமிடம் 23 நொடிகளில், உதிரி பாகங்களாக, மடிக்கணினியை பிரித்து மீண்டும் பொருத்தியதற்காக, லண்டன் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் பல்கலை, டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.
ஆதர்ஷினி கூறியதாவது: மடிக்கணினியை தனித்தனியே பிரித்து மீண்டும் பொருத்த, 15 நாட்கள் பயிற்சி எடுத்தேன். இதை செய்து காண்பித்ததற்காக, கடந்தாண்டு, "இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்" மற்றும் "ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்" ஆகியவற்றில் இடம்பிடித்தேன்.
இவற்றின் வாயிலாக, லண்டன் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் பல்கலை., மார்ச் 22ல் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post