10% அகவிலைப்படி நிலுவை தொகையை புதன் கிழமைக்குள் வழங்க வேண்டும்!



சற்றுமுன் கிடைத்த நம்பத்தகுந்த தலைமைச்செயலக வட்டாரத்தகவலின்படி தற்போது தமிழக அரசால் அதன் ஊழியர் மற்றும் ஆசிரியர்கள்,பென்ஷன் தாரர்கள் போன்றவர்களுக்கு உயர்த்தப்பட்ட
10 % அகவிலைப்படி உயர்வை ஜனவரி 1 முதல் கணக்கிட்டு மார்ச் முடிய உள்ள 3மாதங்களுக்குண்டான நிலுவைத்தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும் என உத்திரவிட்டது அறிந்ததே.அதிலும் சிறப்பாக இம்முறை காலதாமதமின்றி வழங்க அரசாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக தலைமைச்செயலக வட்டாரத்தில் நிலவும் தகவலின் படி அனைத்துதுறைதலைமை கட்கும் நிலுவைத்தொகையினை உடனடியாக அதாவது வரும் புதன் மாலைக்குள்ளாக அவரவர் வங்கிக் கணக்கில் சேரும் விதத்தில் உடனடியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன் மீது தனிக்கவனம் செலுத்தப்படுவதாகவும்,கரூவூல அலுவலகளுக்கு அகவிலைப்படி நிலுவை தொகை பட்டியல்களை தாமதமின்றி உடனே பாஸ் செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கள் தெரிவிக்கின்றன.தாமதமின்றி பட்டியல் தயாரித்து உடன் கருவூலத்தில் சமர்பிக்க அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் அவரவர் உயர் அலுவலர்கள் மூலம் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக் அறிகிறோம்.எப்படியோ மக்களவை தேர்தலால் ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவை உடனே பணமாக கிடைப்பதால் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளதாக தகவல்

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post