தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது.
கூட்ட முடிவில்,
மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை செய்தியாளர்களிடம் தெரிவித்த மாநில நிர்வாகிகள், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 15 முதல் 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஆசிரியர் பணி கிடைக்காமல், மன உளைச்சலுக்கு ஆளான, 30 ஆயிரம் பட்டதாரிஆசிரியர்களுக்கு, மாநில அரசு தற்போது அறிவித்துள்ள தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளித்து அவர்களை பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம்செய்யவேண்டும்.மத்திய இடைநிலை கல்வித் திட்டத்தில், 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.காலிப் பணியிடங்களை நியமனம் செய்யும் போது, அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும். பள்ளி கல்வித்துறையில், 25 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் உள்ளன.
இந்த பணியிடங்களை, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.இக்கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், லோக்சபா தேர்தலில் சங்க உறுப்பினர்கள் “நோட்டா” பட்டனை பயன்படுத்துவோம், என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Tags
Latest News