CLAT 2014 தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

காமன் லா அட்மிஷன் டெஸ்ட் (CLAT 2014)  ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க ஏப்ரல் 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 31 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்களின் நலன் கருதி ஏப்ரல் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
குஜராத் நேஷ்னல் லா யுனிவர்சிட்டி CLAT 2014 தேர்வை நடத்துகிறது. இத்தேர்வு மே 11ம் தேதி நடைபெறுகிறது.
இத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இளங்கலை சட்டப் படிப்பான எல்.எல்.பி, முதுகலை சட்டப் படிப்பான எல்.எல்.எம் .,யில் சேர முடியும்.
விண்ணப்பிக்கும் முறை, தகுதி குறித்த விவரங்களுக்கு www.clat.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post