சென்னை: தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்கிறது. இதற்கான உத்தேச மின்கட்டணத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதேநேரத்தில் மின்கட்டணத்தை ஒழுங்கு முறை ஆணையம் எப்படி நிர்ணயித்தாலும் மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நிலக்கரி விலை உயர்வு, ஊழியர்கள் சம்பளம், ஒய்வூதியம் உயர்வால் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதற்கான, 2013-14ம் ஆண்டிற்கான உத்தேச மின்கட்டணத்தை ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, யூனிட்டுக்கு 40 முதல் 85 காசுகள் உயர்த்த்தப்படுகிறது. 50 முதல் 100 யூனிட்கள் வரை 40 காசுகள் <உயர்கிறது. 100 முதல் 200 யூனிட்கள் வரை 45 காசுகள் உயர்த்தப்படுகிறது. 201 முதல் 500 யூனிட்கள் வரை 60 காசுகள் உயர்கிறது. 501 யூனிட்களுக்கு மேல் 85 காசுகள் உயர்கிறது. நிலையான மின்கட்டணம் ரூ.10 உயர்கிறது. இது தொடர்பாக ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில். நுகர்வோர் பொஐமக்கள் கருத்து கேட்டபின் மின்கட்டணம் குறித்த இறுதி அறிக்கை வெளியிடப்படும். வரும் 26ம் தேதி வரை பொது மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மானியம்- தமிழக அரசு அறிவிப்பு: இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட செய்தியில், மின்கட்டணத்தை ஒழுங்கு முறை ஆணையம் எப்படி நிர்ணயித்தாலும் அதற்கான மானியத்தை தமிழக அரசு வழங்கும். ஏழை எளிய மக்கள் பாதிக்காத வகையில் மானியம்வழங்கப்படும். கூடுதல் மானியத்தை மின்வாரியத்திற்க வழங்குவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மின்வாரியத்தை சீர்திருத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. பூதிய பூனிட்கள் மூலம் , இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 2,206 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என கூறியுள்ளார்.
Tags
Latest News