2. *பள்ளியில் நடப்பதை அங்கேயே விட்டுவிடுங்கள். பள்ளி கிசுகிசுக்களை வீட்டிற்கோ அல்லது வீட்டின் கிசுகிசுக்களை பள்ளிக்கோ சுமந்து வர வேண்டாம்.
3. *சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வந்து அதே போல சரியான நேரத்திற்கு பள்ளியிலிருந்து செல்லுங்கள்.
4. *நமது பணிக்கு தொடர்பில்லாத தேவையற்ற பேச்சுக்களை தவிருங்கள். அதனால் மோசமான பின்விளைவுகளையே சந்திக்க நேரிடும்.
5. *எதையுமே எதிர்பார்க்காதீர்கள். யாரும் உதவினால் நன்றியோடு இருங்கள். உதவாத பட்சத்தில் அக்காரியத்தை நீங்களே செய்து கொள்ளக் கற்பீர்கள்.
6. *பணியை மிகச் சிறப்பாக செய்யுங்கள் அதற்கு அங்கிகாரம் கிடைத்தால் வாழ்த்துக்கள். கிடைக்காவிட்டால் பரவாயில்லை. உங்கள் அறிவாற்றலுக்கும் அடுத்தவர்களை நீங்கள் மதிக்கும் பாங்கிற்காகவுமே உங்களை அனைவரும் நினைவில் வைத்திருப்பார்கள்
7. *எப்பொழுதும் பள்ளியை கட்டிக்கொண்டு அழாதீர்கள். குறிப்பாக EMIS. வாழ்க்கையில் செய்வதற்கு அதை விடவும் சிறந்த காரியங்கள் ஏராளம் உண்டு.
8. *நான் எனும் அகங்காரத்தை அறவே ஒழியுங்கள். ஈகோ வேண்டவே வேண்டாம். சம்பளத்திற்காக அல்ல மனசாட்சிக்கு பயந்து வேலை செய்யுங்கள் நம்முடைய நற்குணங்களே நம் சொத்துக்கள். அவையே நம் சந்தோஷத்தின் ஊற்றுக்கண்.
9. *அடுத்தவர் உங்களை எப்படி நடத்தினாலும் பணிவோடு இருங்கள். எல்லோரையும் எப்போதும் திருப்திப் படுத்திவிட முடியாது.
10. *இறுதியில் நம் குடும்பம், நண்பர்கள், வீடு, ஆழ் மன அமைதியை விட எதுவும் பெரிதில்லை.
Tags
Healthy Tips