எஸ்.பி.ஐ.,யில் சம்பள கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, முன்கூட்டியே அனுமதிக்கப்பட்ட தனிநபர் கடன் வழங்கும் திட்டம், விரைவில் செயல்படுத்தப்படும்.இந்த திட்டம், எஸ்.பி.ஐ., 'யோனோ செயலி' வாயிலாக, ஜூன் வரை செயல்படுத்தப்படும். குறைந்த பட்சம், 25 ஆயிரம் முதல், அதிகபட்சம், 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
கடன் தொகையை, அதிகபட்சம், 18 மாதங்களுக்குள், திருப்பி செலுத்த வேண்டும். சம்பள கணக்கு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே, இந்த கடன் வழங்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.