குறைந்த விலையில் நோக்கியா 106 அறிமுகம்


நோக்கியா நிறுவனம், மத்திய நிலையிலும், பட்ஜெட் விலையிலும் பல மொபைல் போன்களை விற்பனைக்கு வெளியிட்டு வருகிறது. அண்மையில் இந்த வகையில் நோக்கியா 106 என்ற மொபைல் போனை ரூ.3,500 என்ற விலையில் வெளியிட்டுள்ளது. 

1.8 அங்குல டி.எப்.டி. டிஸ்பிளே தரும் திரை, தூசு படியாத கீ பேட், 4 வழிகளில் இயங்கும் நேவிகேஷன் கீ, எப்.எம்.ரேடியோ, இரண்டு பேண்ட் இயக்கம், நோக்கியா சிரீஸ் 30 ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனப் பல அத்தியாவசிய வசதிகளைக் கொண்டுள்ளது. இதன் 800 mAh திறன் கொண்ட Nokia BL5CB பேட்டரி 9.9 மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தக் கூடிய வசதியை அளிக்கிறது. 

ஒருமுறை சார்ஜ் செய்தால், 35 நாட்கள் மின்சக்தி தங்குகிறது. இந்த போனின் பரிமாணம் 112.9 x 47.5 x 14.9 மிமீ. எடை 74.2 கிராம். இதில் ஒன்றுக்கு மேற்பட்ட அலாரம் வைத்துக் கொள்ளும் வசதி உள்ளது. கருப்பு, சிகப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இது கிடைக்கிறது. ஏற்கனவே, இதே வரிசையில் வெளியான நோக்கியா 105 மொபைல் போனைக் காட்டிலும் சற்று பெரிய திரையினை கொண்டிருக்கிறது

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post