11 வகுப்புகளுக்கு ஆண்டு தேர்வு அறிவிப்ப

தமிழக பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான வுகுப்புகளுக்கு, ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்., 21ல், அனைத்து தேர்வுகளும் நிறைவடைகின்றன.

இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியே பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதன் விவரம்: *பிளஸ் 1 வகுப்புக்கு, மார்ச், 11ல் தேர்வு துவங்கி மார்ச், 31ல் முடிகிறது * 6ம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரையிலான ஆண்டு தேர்வு, ஏப்., 5ல் துவங்கி, ஏப்., 21ல் முடிகிறது

* 9ம் வகுப்புக்கான அறிவியல் செய்முறை தேர்வை, மார்ச்,25க்குள் முடிக்க உத்தரவிடப் பட்டுள்ளது

*பிளஸ் 2வுக்கு, செய்முறை தேர்வை, பிப்., 5ல் துவங்கி, 25க்குள் முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது

*10ம் வகுப்புக்கும், பிப்., இறுதிக்குள் செய்முறை தேர்வை முடித்து, மதிப்பெண் பட்டியல் தர அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

*பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 4ல் துவங்கி, ஏப்., 1ல் முடிகிறது. *10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 15ல் துவங்கி ஏப்., 13ல் முடிகிறது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post