இந்திய பயோமெடிக்கல் விஞ்ஞானிகளிடமிருந்து, 2014 - 15ம் ஆண்டின் சர்வதேச உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை, மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில்(ICMR) வரவேற்கிறது.
உதவித்தொகை எண்ணிக்கை - இளம் விஞ்ஞானிகளுக்கு 12, மூத்த விஞ்ஞானிகளுக்கு 6.
காலகட்டம் - இளம் விஞ்ஞானிகளுக்கு 3 முதல் 6 மாதங்கள், மூத்த விஞ்ஞானிகளுக்கு 10 முதல் 15 நாட்கள்.
தகுதிகள்
தகுதிகள்
* M.D., அல்லது Ph.D., பட்டம் பெற்று, குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மூத்த விஞ்ஞானிகள் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
* அங்கீகரிக்கப்பட்ட பயோமெடிக்கல் அல்லது ஆராய்ச்சி அல்லது சுகாதார நிறுவனத்தில் நிரந்தரமான பணி வாய்ப்பில் இருக்க வேண்டும்.
* இளம் விஞ்ஞானிகள் 45 வயதிற்குள்ளும், மூத்த விஞ்ஞானிகள் 57 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
நிதி உதவி
இளைய விஞ்ஞானிகள்
மாதத்திற்கு 3,000 அமெரிக்க டாலர்கள், எதிர்பாராத செலவுகளுக்காக ரூ.20,000 ஆகியவை வழங்கப்படுவதோடு, திரும்பி வருவதற்கான எகனாமி வகுப்பு விமான பயணச்சீட்டும் வழங்கப்படும்.
மூத்த விஞ்ஞானிகள்
ஒரு நாளைக்கு 200 அமெரிக்க டாலர்கள், எதிர்பாராத செலவுகளுக்காக ரூ.20,000 ஆகியவை வழங்கப்படுவதோடு, திரும்பி வருவதற்கான எகனாமி வகுப்பு விமான பயணச்சீட்டும் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கான உதவித்தொகை, பிப்ரவரி 28ம் தேதிக்குள் வழங்கப்படும். இதர விரிவான தகவல்களுக்கு www.icmr.nic.in
Tags
News