கெய்ல் நிறுவனத்தில் அதிகாரி பணியிடங்கள்


கேஸ் அதாரிடி ஆப் இந்தியா லிமிடெட் எனப்படும் கெய்ல் நிறுவனம் இந்தியாவின் இயற்கை எரிவாயு தொடர்புடைய பிரம்மாண்டமான நிறுவனமாகும். இயற்கை எரிவாயு கண்டுபிடித்தல், உற்பத்தி செய்தல், பண்படுத்துதல், இடம்மாற்றுதல், வணிகம் செய்தல் என்ற பல்வேறு பணிகளை இந்த நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் கேட் (GATE) தேர்வு வாயிலாக எக்ஸ்டிக்யூடிவ் டிரெய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்
மெக்கானிகலில் 18, எலக்ட்ரிகலில் 14, இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 13, கெமிக்கலில் 20 காலியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த 4 பொதுப் பிரிவுகளுக்கு இன்ஜினியரிங் சார்ந்த பல்வேறு இதர பிரிவுகளைச் சார்ந்தவர்களும் விண்ணப்பிக்க முடியும்.
வயது
கெய்ல் நிறுவன எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 28.01.2014 அடிப்படையில் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

தகுதி
தொடர்புடைய இன்ஜினியரிங் பிரிவு ஏதாவது ஒன்றில் குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்துடன் கேட் தேர்வு மதிப்பெண்ணும் தேவைப்படும்.
தேர்ச்சி முறை
கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் குழு விவாதம் மற்றும் நேர்காணலுக்கான அழைப்பு அனுப்பப்படும். இதன் மூலம் தேர்ச்சி இருக்கும். உடல் தகுதி அறிய மருத்துவப் பரிசோதனையும் இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை
ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 28.01.2014

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post