2,500 ஒப்பந்த ஆசிரியர்களை நீக்க முடிவு.

பீகாரில், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட, 2,500 ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தோல்வி அடைந்ததால், அவர்களை நீக்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.


தகுதித் தேர்வு:

பீகாரில், ஆரம்ப பள்ளிக்கூடங்களில், ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்த, ஒப்பந்த அடிப்படையில், ஆயிரக்கணக்கில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களுக்கு, தகுதித் தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி அடைந்தவர்களைமட்டும் நிரந்தரமாக்க, முடிவு செய்யப்பட்டது. ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட, ஆசிரியர்களின் பாடம் நடத்தும் தரம், குறைவாக இருப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, ஆசிரியர்களின் தரத்தை நிர்ணயிப்பதற்காக, தகுதித் தேர்வு நடத்த, மாநில அரசு முடிவு செய்தது. இது, 2008ல் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, மற்றொரு வாய்ப்பும் வழங்கப்பட்டது. அதிலும் தேர்ச்சி பெறாதவர்கள், பணியில் இருந்து நீக்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டது.

2 முறையும் தோல்வி:

அந்த வகையில், 2012ல் இரண்டு முறை தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தகுதித் தேர்வில், தேர்ச்சி அடையாத, 151 ஆசிரியர்கள் நீக்கப்பட்டனர்; கடந்தாண்டு, 10 ஆயிரம் ஆசிரியர்கள் நீக்கப்பட்டனர். அந்த வகையில், இந்தாண்டு, இரண்டு முறை தொடர்ந்து நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி அடையாத, 2,733 ஆசிரியர்கள், விரைவில் பணியிலிருந்து நீக்கப்பட உள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை,மாநில கல்வித் துறை துவக்கிவிட்டதாக, மாநில கல்வி அமைச்சர், பி.கே.சகாய் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ''அரசுக்கு மாற்று வழி தெரியவில்லை; விதிமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது,'' என்றார்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post