ஆசிரியர் தகுதித் தேர்வில்(டிஇடி) தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரிபார்ப்பு இன்று 32 மாவட்டங்களில் நடக்கிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வில்(டிஇடி) தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரிபார்ப்பு இன்று 32 மாவட்டங்களில் நடக்கிறது. அரசுப் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான 
தகுதித் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி( தாள்1), 18ம் தேதி(தாள் 2) நடந்தது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வில் தாள் 1ல் 2 லட்சத்து 65 ஆயிரத்து 568, தாள் 2ல் 4 லட் சத்து 19 ஆயிரத்து 898 பேர் எழுதினர். இவற்றில் தாள் 1ல் 12 ஆயிரத்து 596 பேரும், தாள் 2ல் 18 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ள னர்.

தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்று முதல் சான்று சரிபார்ப்பு 32 மாவட்டங்களில் நடக்கிறது. கடந்த முறை சான்று சரிபார்ப்பில் கடைபிடிக்கப்பட்ட வெயிட்டேஜ் மதிப்பெண் போடும் முறை இந்த முறை இரண்டு தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடைபிடிக்கப் போவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.இன்று தொடங்கும் இந்த சான்று சரிபார்ப்பு 27ம் தேதி வரை நடக்கிறது.சான்று சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதால் அதை பதிவிறக்கம் செய்து கொண்டு உரிய சான்றுகளுடன் வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பம், அடையாளச் சான்று, கல்விச் சான்றுகள்,சாதிச் சான்றுகள், அட்டஸ்டட் ஜெராக்ஸ் நக ல்கள், 3 போட்டோக்கள் கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று தொடங்கும் சான்று சரிபார்ப்பு பள்ளிக் கல்வித் துறையை சேர்ந்த 4இயக்குநர்கள் தலைமையில் நடக்கிறது. 20 இணை இயக்கு நர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post