பிப்ரவரி 13.ல் தமிழக பட்ஜெட் தாக்கல்.


பிப்ரவரி 13-ஆம் தேதி தமிழக சட்டமன்றம் கூடுகிறது. அன்று காலை 10 மணிக்கு 2014-15 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை தாக்கல் செய்யப்படும் என சட்டமன்றச் செயலாளர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 30-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 3-ஆம் தேதி வரை நடைபெற்றது. ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.

இந்த கூட்டத்தொடர் குறுகிய காலம் மட்டுமே நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தொடரை தேமுதிக-வினர் புறக்கணித்தனர்.ஆளுநர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, அதிமுக எம்.எல்.ஏ.மார்க்கண்டேயன், திமுக தலைவர் கருணாநிதி பற்றி விமர்சித்ததற்கு கண்டனம் தெரிவித்த திமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.அதன் பின்னர் கருணாநிதி பற்றி அதிமுக உறுப்பினர் இழிவாக பேசியதையும் எம்.எல்.ஏ.சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதையும் கண்டித்து, பேரவை கூட்டத் தொடரை திமுக புறக்கணிக்கிறது என மு.க.ஸ்டாலின் கூறினார்.ஆளுநர் உரை, முதல்வர் பதிலுரை, வெளிநடப்பு, புறக்கணிப்பு என கூட்டத்தொடர் 3-ஆம் தேதி நிறைவு பெற்றது. அன்றைய தினம் அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், 2014-15 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை தாக்கல் செய்வதற்காக வரும் 13-ஆம் தேதி சட்டமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post