சாதனை: 90 வயதில் முனைவர் பட்டம் பெற்ற மாணவர்
லண்டன்: பிரிட்டனைச் சேர்ந்த 90 வயது மாணவர் முனைவர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற ஓய்வு பெற்ற ஆசிரியரான எரிக் வூப், தனது பள்ளிப் படிப்பை முடித்து 74 ஆண்டுகளுக்குப் பின் 90வது வயதில் பிஎச்.டி., பட்டம் பெற்றுள்ளார்.
இதுகுறித்து, எரிக் வூப் கூறியதாவது: "லண்டனைச் சேர்ந்த, தொழிலாளிக்கு பிறந்த நான் 16வது வயதில் தந்தையின் வேண்டுகோளுக்கிணங்க பள்ளிப்படிப்பை விட்டு பணியில் சேர்ந்தேன்; இரண்டாம் உலகப் போர் துவங்குவதற்கு முன், லண்டனுக்கு குடிபெயர்ந்து கணித ஆசிரியர் பயிற்சி பெற்றேன். பின், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றபின், 39வது வயதில் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன்.
திருமணமாகி நான்கு குழந்தைகள் பிறந்தனர். கணித ஆசிரியராக 20 ஆண்டுகள் பணிபுரிந்தேன். கடந்த 2003ல், எம்.ஏ., பட்டம் பெற்றேன்; 2008ல் லாங்கெஸ்டர் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., ஆய்வுப் படிப்பில் சேர்ந்தேன். பல்கலைக்கழக சூழல் என்னை உற்சாகப்படுத்தியதுடன், தூண்டுகோலாகவும் இருந்தது; சக மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் உதவி கிடைத்தது." இவ்வாறு எரிக் வூப் கூறினார்.
Tags
News