எல்.எல்.பி முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் சட்டம் தொடர்பான பணி

நமது நாட்டின் மிக முக்கிய படைகளில் பிரதானமான இந்திய ராணுவத்தில் சட்டம் படித்தவர்களை ஜே.ஏ.ஜி., முறையில் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 10 (ஆண்கள் -07, பெண்கள் -03)
வயதுவரம்பு: இந்திய ராணுவத்தின் ஜே.ஏ.ஜி., பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் எல்.எல்.பி முடித்திருக்க வேண்டும். பார் கவுன்சில் ஆப் இந்தியாவில் பதிவு செய்வதற்கு தகுதி பெற்றிருக்க வேண்டும்.
உடல் தகுதிகள்: ஆண் விண்ணப்பதாரர்களுக்கு உயரம் குறைந்த பட்சம் 157.5 செ.மீ., யும், பெண் விண்ணப்பதாரர்களுக்கு 152 செ.மீ. உயரமும், உயரத்திற்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட தேர்ச்சி முறை உள்ளது. முதல் கட்டத்தில் குரூப் டெஸ்ட், சைகாலஜிக்கல் டெஸ்ட் மற்றும் நேர்காணல். இதில் தேர்ச்சி
பெறுபவர்கள் சைகாலஜிக்கல் ஆப்டிடியூட் டெஸ்ட், டாகுமெண்ட் வெரிபிகேஷன் மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவ மாதிரியில் விண்ணப்பங்களை நிரப்பி தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யபப்டட் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Directorate General of Recruitment Rtg. JAG Entry , AG’s Branch,Army Headquarters, West Block & III, RK Puram, New Delhi – 110 066
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.02.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://joinindianarmy.nic.in என்ற இணையதளத்தைப் பார்கக்வும்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post