அரசு ஊழியர்களுக்கு யோகா பயிற்சி

அரசு ஊழியர்களுக்குயோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதுகுறித்து திண்டுக்கல் கலெக்டர் வெங்கடாசலம் கூறியதாவது: 
அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்த காலத்திற்குள் பொதுமக்களை சென்றடைய வேண்டும். இதற்காக, அரசு அலுவலர்கள் தொடர்ந்து பணியாற்றுவதால், மனஅழுத்தம் ஏற்படுகிறது. இதையடுத்து உடல்நலம், மனநலம் மேம்படுத்துவதற்காக, அரசு ஊழியர்களுக்கு யோகா, தியானம் பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.பணிகளுக்கு இடையூறு இல்லாமல், எந்த மதத்தையும் சாராத, சடங்குகள் அற்ற மனவள கலை யோகா பயிற்சி அவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி, தினமும் ஒரு மணி நேரம் வீதம் 18 நாட்களுக்கு அளிக்கப்படுகிறது. இதற்கு ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதும் என்றார்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post