தமிழ்நாடு சிறப்பு காவல் படை 10 ஆயிரத்து 99 பேருக்கு, முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று(திங்கட்கிழமை) பணி நியமன ஆணை வழங்குகிறார்தமிழக போலீஸ் துறைக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு சலுகைகளையும்,
திட்டங்களையும் அறிவித்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையினர் 10 ஆயிரத்து 99 பேருக்கு பணி நியமனஆணையை இன்று வழங்க உள்ளார்.தமிழ்நாடு சிறப்பு காவல் படையினருக்கு ஆள்சேர்ப்பு பணி அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், பல்வேறு பயிற்சிகளில் வெற்றி பெற்றவர்கள் தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்து 99 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு பணி நியமன ஆணை இன்று வழங்கப்படுகிறது.சென்னை தலைமை செயலகத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு, நடைபெறும் விழாவில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 10 ஆயிரத்து 99 பேர்களில், 25 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கி சிறப்பிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அரசு தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், முதன்மை செயலாளர் ஆபூர்வா வர்மா, தமிழக டி.ஜி.பி.ராமனுஜம் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வருகிற 12–ந்தேதி முதல் பயிற்சிகள் தொடங்குகிறது
Tags
Job News