தமிழகத்தில் வரும் 2016-17-ஆம் நிதியாண்டில் ஏழாவது ஊதியக் குழுவின்பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வியாழக்கிழமை தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2014-15-ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் ஊதியம் குறித்த ஒதுக்கீடு ரூ. 35,720.86 கோடி மற்றும் ஓய்வூதியம் குறித்த செலவினத்துக்கான ஒதுக்கீடு ரூ. 16,020.63 கோடியாகும்.
அகவிலைப்படி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் காலிப் பணியிடங்களை நிரப்புவதால் ஏற்படும் கூடுதல் செலவு ஆகியவற்றின் காரணமாக, 2015-16, 2016-17-ஆம் ஆண்டுகளில் இந்த வளர்ச்சி விகிதம் முறையே 14.62 மற்றும் 20 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.2016-17-ஆம் ஆண்டு முதல் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என கருதப்பட்டுள்ளது. முந்தைய ஊதியக் குழுக்கள் போலன்றி, இந்த குழுவின் பரிந்துரைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பிந்தைய ஆண்டுகளில் தவணைகளில் நிலுவைத் தொகை வழங்க வேண்டிய நிலை எழாது எனவும் கருதப்பட்டுள்ளது.

Tags
Pay commission