50% பதவி உயர்வு வழங்க ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்.
முதுகலை ஆசிரியர் பதவி உயர்வில், 50 சதவீத இடங்களை தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் பணிபுரியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தி உள்ளது.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், சென்னையில் நடந்தது.
சங்க தலைவர், தியாகராஜன் தலைமை தாங்கினார்.பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்; 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; பள்ளி கல்வித் துறையில், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் போது, 50 சதவீத இடங்களை, அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் கோஷம் போட்டனர்.மாநிலம் முழுவதிலும் இருந்து 3,000த்திற்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை, தமிழக அரசு பரிசீலனை செய்யாவிட்டால், பொதுக்குழுவை கூட்டி, அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வோம் என தியாகராஜன் தெரிவித்தார்.
Tags
kalvi news