ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு வழங்க கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு வழங்க கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் பழனிமுத்து, ரமேஷ் மற்றும் ராஜரத்தினம் உட்பட பலர் தாக்கல் செய்துள்ள மனுக்களில் கூறியிருப்பதாவது:– தகுதி தேர்வு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவின்படி, மாநில அரசுகள் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தி வருகிறது. ஆந்திரா உள்ளிட்ட 13 மாநில அரசுகள், இந்த ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு முறையை பின்பற்றுகிறது. ஆனால், தமிழக அரசு இடஒதுக்கீடு முறையை பின்பற்றவில்லை. இந்த தகுதி தேர்தவில் 60 சதவீதம் மதிப்பெண்கள் (150 மதிப்பெண்ணுக்கு 90 மதிப்பெண்) எடுத்தால் மட்டுமே தேர்ச்சி என்று நிர்ணயம் செய்து, தேர்வை நடத்தி வருகிறது. இது அரசியல் சட்டத்துக்கும், இடஒதுக்கீடு முறைக்கும் எதிரானது. எனவே ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு முறையை பின்பற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறுஅதில் கூறப்பட்டு இருந்தது.இந்த மனுவுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தாக்கல் செய்த பதில் மனுவில், 'தரமான ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதில், எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ள முடியாது என்று அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.

எனவே ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு வழங்க முடியாது' என்று கூறியிருந்தது.இந்த மனுக்களை தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்து நேற்று தீர்ப்பளித்தனர். அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:–அரசின் தீர்க்கமான முடிவு பொதுவாக அரசின் கொள்கை முடிவு என்பது கோர்ட்டின் பரிசீலனைக்கு கீழ் வராது. ஒருவேளை அந்த கொள்கை முடிவு தன்னிச்சையாக இருந்தால் மட்டுமே, அதில் கோர்ட்டு தலையிட முடியும். தரமானகல்வி வழங்குவதற்காக, ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி மதிப்பெண் 60 சதவீதம் என்று அரசு நிர்ணயம் செய்துள்ளது. இந்த தகுதி மதிப்பெண் நிர்ணயம் செய்வதில் எந்த சமரசமும் செய்ய முடியாது என்று அரசு தீர்க்கமானமுடிவு எடுத்துள்ளது.

மேலும், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், தகுதி மதிப்பெண்ணில் எந்த சலுகைகளும் வழங்க வில்லை. ஆனால், சம்பந்தப்பட்ட மாநில அரசு தகுதி மதிப்பெண்ணில் சலுகைகள் வழங்கலாம் என்று கூறியுள்ளது.இந்த நாட்டின் வருங்கால தலைவர்களான குழந்தைகளின் நலன் கருதி, தமிழக அரசுதன்னுடைய தனி அதிகாரத்தை நேர்மையாகவும், நியாயமாகவும் எடுத்துள்ளது. எனவே இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்ததன் அடிப்படையில், இந்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம்.இந்த வழக்கில் ஒரு மனுதாரரான ராஜரத்தினம் என்பவர், இது தொடர்பான வேறு ஒரு வழக்கில் மனுதாரர் நிர்மலா என்பவருக்காக ஏற்கனவே ஆஜராகியுள்ளார். ஆனால், இந்த விவரத்தை இந்த கோர்ட்டுக்கு தெரியப்படுத்தாமல் அவர் மறைத்துள்ளார்.

எனவே அவருக்கு வழக்கு செலவாக ரூ.10 ஆயிரம் விதிக்கிறோம். இந்த தொகையை 2 வாரத்துக்குள் தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக் குழுவுக்கு செலுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post