தற்செயல் விடுப்பு விதிகள்


1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல்
விடுப்பு வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை அல்லது ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக்கலாம்.

2. அவ்வாறு நாட்கள் தொடர்ந்து அனுபவிக்கும்
போது , இயற்கை சீற்றம், தேசிய தலைவர் மரணம் , பந்த், பண்டிகை, திடீர் விடுமுறை காரணமாக 11வது நாள் அரசு விமுறை என அறிவிக்கப்பட்டால் ஊழியர் 10-க்கு மேற்பட்ட அந்த நாளையும்விடுப்பாக அனுபவிக்கலாம்.
(அ.நி.எண். 309 ப.ம.நி.சி.(அவி.11) நாள் 16.08.93)


3. தற்செயல் விடுப்பை ஈட்டிய விடுப்பு மற்றும் பிற முறையான விடுப்புடன் இணைத்து அனுபவிக்க இயலாது.

4. தற்செயல் விடுப்பு விண்ணப்பத்தில் அதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டியதில்லை.
(அ.க.எண். 1410 ப.ம.நி.சீ
துறை 2.12.77 ).

5. தற்காலிக பணியாளர் மற்றும் தகுதிகாண் பருவத்தினருக்கு 3 மாதங்களுக்கு 2 நாட்கள் என்ற அளவில் இவ்வுடுப்பு வழங்கப்படும். 
(அவி. இணைப்பு VI )

6. தகுதிகாண்பருவம் முடித்தவர் / நிரந்தர பணியாளர் ஆண்டு துவக்கத்திலேயே பணிநிறைவு பெரும் பணியாளருக்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பை ஆண்டு துவக்கத்திலேயே வழங்கலாம்.
(அரசு கடித எண். 61559 /82-4 ப.ம.சீ துறை நாள்.17.1.83)

7. குறைந்தபட்சம் அரைநாள் சிறுவிடுப்பு அனுமதிக்கப்படும்.

8. அவசர காரணங்களுகளுக்காக முதலில் விடுப்பு எடுத்து விட்டு பின்னர் இதற்கான
விண்ணப்பத்தினை அளிக்கலாம்.
( அரசுக் கடிதம் 61559 /82 -4
ப.ம.சீ துறை நாள். 17.1.83

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post