தொழில்துறை திறன் முன்னேற்றம் உள்ளிட்ட அடிப்படை கல்வியை, முஸ்லீம் மக்களுக்கு வழங்கும் முன்முயற்சி திட்டம் நிறுவப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
Maulana Azad Taleem-e-Balighan என்ற பெயருடைய அந்த திட்டம், தேவையான கல்வியறிவு, அடிப்படைக் கல்வி, தொழில்துறை திறன் மேம்பாடு மற்றும் தொடர்ந்த கல்வி உள்ளிட்டவை, 15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதில் உள்ள சுமார் 1 கோடி முஸ்லீம் இளைஞர்களுக்கு வழங்கப்படுவதை நோக்கமாக கொண்டு இத்திட்டம் நிறுவப்பட்டுள்ளதாக தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுபான்மை மக்களின் மத்தியில் கல்வியை மேம்படுத்த உருவாக்கப்பட்ட திட்டங்களின் வெற்றிகள், அம்முயற்சிகளை மேலும் விரிவுபடுத்த உற்சாகமூட்டுவதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆரம்ப பள்ளிகளில் சேரும் முஸ்லீம் குழந்தைகளின் எண்ணிக்கை கடந்தாண்டுகளில் இருந்த 9.4% என்ற நிலையிலிருந்து, 14.2% என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. அதேபோன்று, உயர்நிலைக் கல்விக்கு முன்னேறும் முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கை 7.2% என்ற அளவிலிருந்து 12.1% என்பதாக அதிகரித்துள்ளது.
Tags
kalvi news