தற்போது நடைபெற்று வரும் 15வது லோக்சபா 62 சதவீதம் மட்டுமே இயங்கி உள்ளது. திட்டமிடப்பட்ட 356 அமர்வுகளில் 345 அமர்வுகள் மட்டுமே அவை இயங்கி உள்ளது.
15வது லோக்சபாவின் மொத்த பார்லி., நேரம் 2017 மணிநேரம் ஆகும். ஆனால் இவற்றில் பார்லி., இயங்கியது 1330.9 மணி நேரங்கள் மட்டுமே. எதிர்க்கட்சிகளின் அமளி, கூச்சல் குழப்பம் காரணமாக பல கூட்டத் தொடர்கள், செயல்பாடமல் முழுவதும் முடங்கி உள்ளன. 2010ம் ஆண்டின் குளிர்கால கூட்டத் தொடரின் திட்டமிடப்பட்ட நேரம், 138 மணிநேரம். ஆனால் இயங்கியதோ வெறும் 7.62 மணிநேரம் மட்டுமே. பெரும்பாலான கூட்டத் தொடர்களின் செயல்பாடு மிகக் குறைவாகவே உள்ளது. 2012ம் ஆண்டு மழைக்கால கூட்டத் தொடர் 21 சதவீதமும், 2013ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் 49 சதவீதம் மட்டுமே இயங்கி உள்ளது. பார்லி., செயல்பாடு குறித்த ஆய்வு நடத்தப்பட்ட ஒரு அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு விவகாரங்கள் குறித்து எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பும் முதல் ஒருமணி நேரமான கேள்வி நேரம், பார்லி.,யின் இரு அவைகளிலும் மோசமான செயல்பாடாகவே இருந்துள்ளது. பெரும்பாலான கூட்டத் தொடர்களில் கேள்வி நேர செயல்பாடு என்பது ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்துள்ளது. 2010ம் ஆண்டின் குளிர்கால கூட்டத் தொடரின் போது 0.78 சதவீதம் நேரமும், 2012ம் ஆண்டு மழைக்கால கூட்டத் தொடரின் போது 1.23 சதவீதம் நேரமும் கேள்வி நேரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சிறந்த கேள்வி நேர செயல்பாடாக, 2009ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரின் போது நடைபெற்ற 19.75 சதவீத செயல்பாடே கருதப்படுகிறது.
பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகள் 2010ம் ஆண்டு குளிர்கால கூட்டத்தொடரின் போது 1.12 சதவீதமும், 2011 களிர்கால கூட்டத் தொடரின் போது 39.33 சதவீதமும் செயல்பாட்டுள்ளன. பொருளாதாரம் சார்ந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் போது கூட்ட செயல்பாடுகள் ஆரோக்கியமானதாகவே இருந்துள்ளது. 2012ம் ஆண்டு மழைக்கால கூட்டத் தொடரின் போது எந்தவொரு நிதித்துறை மசோதாக்களும் தாக்கல் செய்யப்படவில்லை. 2009ம் ஆண்டு தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சி காலம் துவங்கிய போது அவை செயல்பாடு 81.35 சதவீதமாக இருந்துள்ளது. பார்லி.,யின் மொத்த செயல்பாடுகளில் சில மணி நேரங்கள், இரங்கல் வாசிப்பு, மசோதா தாக்கல் உள்ளிட்டவைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
லோக்சபாவுடன் ஒப்பிடுகையில் ராஜ்யசபாவின் செயல்பாடு ஓரளவிற்கு திருப்திகரமாகவே உள்ளது. மொத்தம் 67 சதவீதம் ராஜ்யசபா செயல்பட்டுள்ளது. மொத்முள்ள 1785 அமர்வுகளில் 1198.93 மணிநேரம் செயல்பட்டுள்ளது. சில கூட்டத் தொடர்களில் ராஜ்சபாவில் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்துள்ளது. 2010 குளிர்கால கூட்டத்தொடரின் போது 2 சதவீதம் மட்டுமே ராஜ்யசபா இயங்கி உள்ளது. லோக்சபாவின் சிறந்த கூட்டமாக கருதப்படும் 2009ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரின் போது ராஜ்யசபா 147.45 மணிநேரம் செயல்பட்டுள்ளது.
Tags
Latest News