PG/TET I / TET II வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் (04.02.2014)விசாரணை நிலை(Update News)



சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் 
ஒன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது எனவே அவற்றை தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக தனியாக பட்டியலிட நீதியரசர் ஆர் சுப்பையா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இன்று (04.12.2014 )வழக்குகள் தனித்தனியாக வகைப்படுத்தி விசாரணைக்கு வந்தன.இவை 26.11.13 க்கு பிறகு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் ஏற்கனவே மதுரை கிளையில் முடிவு செய்யப்பட்ட வினாக்களை ஆராயக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வழக்குகளில் 26.11.13 க்குப்பின் தாக்கலான வழக்குகள் அனைத்தையும் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டதால் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதியரசர் ஆர் சுப்பையா மற்ற வழக்குகளுக்கு டிஆர்பி பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்குகளை ஒத்திவைத்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post