துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான, மூன்றாம் பருவத்தேர்வு ஏப்ரல், 21ம் தேதி துவங்கி, ஏப்ரல் 29ம் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில்உள்ள துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்,
ஒன்றாம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, முப்பருவக்கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.இதில் மூன்றாம் பருவத்துக்கான தேர்வுகளை மார்ச், 21ம் தேதி துவங்கி, 29ம் தேதி முடிக்க, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தொடக்கக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: அனைத்து துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும், ஏப்ரல், 21ம் தேதி தமிழ், ஏப்ரல் 22ம் தேதி ஆங்கிலம், ஏப்ரல், 26ம் தேதி கணிதம், ஏப்ரல், 28ம் தேதி அறிவியல், ஏப்ரல், 29ம் தேதி சமூகவியல் ஆகிய தேர்வு நடத்தப்பட வேண்டும். இதில், 1, 3, 5, 7ம் வகுப்புகளுக்கு காலை, 10 மணி முதல், மதியம், 12 மணி வரை, 2, 4, 6, 8ம் வகுப்புகளுக்கு மதியம், 2 மணி முதல், 4 மணி வரையும் தேர்வு நடத்தப்படவேண்டும்.
நான்காம் வகுப்பு வரை எஸ்.ஏ.பி.எல்., முறையில் மாணவர்களின் படிநிலைக்கு ஏற்றவாறு மதிப்பீடு செய்ய வேண்டும். தேர்வு நடைபெறும் நாள்முழு வேலைநாளாக செயல்பட வேண்டும். ஏப்ரல், 30ம் தேதி பள்ளி வேலைநாளாக செயல்பட்டு, மே, 1ம் தேதி முதல் ஜூன், 1ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags
kalvi news