சேமநல நிதி ஒரு பணியாளரின் சம்பளத்தில் 12 சதவீதத்தை நிறுவனவனத்திற்கு செலுத்த வேண்டும் என்பது பழைய முறை. தற்போது அந்த முறை மாற்றப்பட்டுள்ளது. ஒரு பணியாளரின் சம்பளம் மற்றும் கிராக்கிப்படி எனப்படும் DAவும் இணைந்து 12 சதவிதாம் செலுத்த வேண்டும்.
உதாரணம் ஸ்ரீநிவாஸ் என்னும் நபர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார் இவரின் அடிப்படை சம்பளம் மாதம் 30,000 ரூபாய், போக்குவரத்து படியாக 5,000 ரூபாய் மற்றும் மருத்துவ படியாக 5,000 ரூபாய். இவரின் சேமநல நிதிஎவ்வளவு என்பதை இப்போது பார்போம்.
பழைய முறை பழைய முறைப்படி ஸ்ரீநிவாஸின் மாத வருமானத்தில் சேமநல நிதி 30,000 ரூபாய்க்கு மட்டுமே கணக்கிடப்படும், ஆதாவது அவரின் அடிப்படை சம்பளத்தில் மட்டுமே கணக்கிடப்படும். இதனால் இவர் மாதம் 3,600 ரூபாய் வரை செலுத்த வேண்டும். இபிஎஃப் = 30,000*12/100= 3,600 ரூபாய்
புதிய முறை பழைய முறைப்படி ஸ்ரீநிவாஸின் மாத வருமானத்தில் சேமநல நிதி போக்குவரத்து படி மற்றும் மருத்துவ படியையும் சேர்த்து 40,000 ரூபாய்க்கு கணக்கிடப்படும். இதனால் இவர் மாதம் 4,800 ரூபாய் வரை செலுத்த வேண்டும். இபிஎஃப் = 40,000*12/100= 4,800 ரூபாய்
Tags
Pay & Pension