கோடை விடுமுறையால் பஸ்களில் நெரிசல்


           தமிழக பள்ளிகளுக்கு, கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், சொந்த ஊர் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில், இருக்கைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. தமிழகத்தில், பள்ளி ஆண்டு இறுதித் தேர்வு, இந்த வாரத்தில் முடிகிறது. 

           இதில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு மட்டும், தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்பு நடத்துகின்றன. ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள பள்ளிகளில், ஓட்டு சாவடி தயார் செய்யும் பணிக்காக, அனைத்து வகுப்புகளுக்கும், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு மாணவர்களை தவிர, பிற வகுப்பு மாணவ, மாணவியருக்கு, ஏப்., 12 முதல், கோடை விடுமுறை துவங்குகிறது. இந்நிலையில், ஏப்., 14ல், தமிழ் புத்தாண்டு வருகிறது. இந்த விடுமுறைக்காக சொந்த ஊர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னை, திருச்சி, ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், விழுப்புரம், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் வழக்கமான ரயில், ஆம்னி பஸ்களில் டிக்கெட் முன்பதிவு, கடந்த வாரமே முடிந்து விட்டது. தொழில் நகரங்களான கோவை, திருப்பூரில் இருந்து, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்களிலும் முன்பதிவு முடிந்துவிட்டது. இதே போல், மறுமார்க்கத்தில், ஏப்., 12 முதல், 17 வரையிலான, அரசு மற்றும் ஆம்னி பஸ்கள், ரயில்களில் முன்பதிவும் முடிந்துவிட்டது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post