மின்வெட்டு பிரச்னை : ஆன்லைன் மூலம் சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தும்பணி பாதிப்பு



மின்வெட்டு பிரச்னையால் சிபிஎஸ்இ விடைத்தாள்கள் ஆன்லைன் மூலம் திருத்தும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. 
மத்திய பள்ளிக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் கடந்த மாதம் 1ம் தேதி தொடங்கின. பத்தாம் வகுப்பு தேர்வுகள் இரண்டு கட்டமாக பிரிக்கப்பட்டுமார்ச் 1ம் தேதி முதல் 19ம் தேதிவரை ஒரு கட்டமாகவும், 10ம் தேதி முதல் 31ம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் நடந்தன. 12ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 1ம் தேதி தொடங்கி ஏப்ரல் 17ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு தேர்வுகள் தொடங்கின.

இடையில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, 12ம் வகுப்பு தேர்வுகளில் சில மாற்றப்பட்டன. இதன் படி ஏப்ரல் 9ம் தேதி நடக்க இருந்த தேர்வு25ம் தேதியும், 10ம் தேதி தேர்வு 21ம் தேதியும், 12ம் தேதி நடக்கும் தேர்வு 19ம் தேதியும், 17ம் தேதி நடக்க இருந்த தேர்வு 22ம் தேதியும் நடக்கும் என சிபிஎஸ்இ அறிவித்தது. பத்தாம் வகுப்பு தேர்வில் இந்த ஆண்டு நாடு முழுவதும் 13 லட்சத்து 28 ஆயிரத்து 970 பேர் எழுதியுள்ளனர். அவர்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 940 பேர் மாணவர்கள்,5 லட்சத்து 35 ஆயிரத்து 30 பேர் மாணவியர்.12ம் வகுப்பு தேர்வில் 10 லட்சத்து 29 ஆயிரத்து 874 பேர் இந்த ஆண்டு எழுதுகின்றனர். 12ம் வகுப்பு தேர்வுகள் இன்னும் முடிவடையாத நிலையில், பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் கடந்த 19ம் தேதி முதல் திருத்தப்பட்டு வருகின்றன. மண்டலம் விட்டு மண்டலம் மாற்றி மாற்றி திருத்த சிபிஎஸ்இ ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி சென்னை மண்டலம் தவிர மற்ற மண்டலங்களின் விடைத்தாள்களை சென்னை மண்டலத்தில் உள்ள ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் திருத்தி வருகின்றனர். சென்னையில் நான்கு பள்ளிகளில் ஆன்லைன் மூலம் திருத்தும் பணி நடக்கிறது.

அண்ணா நகரில் உள்ள ஒரு பள்ளியில் தொடர்ந்து நடந்த விடைத்தாள் திருத்தும் பணியின்போது, அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதின் காரணமாக ஆன்லைனில் விடைத்தாள்கள் அப்லோடு ஆகவில்லை. இதனால் திருத்தும் பணிக்கு சென்ற ஆசிரியர்கள் வீட்டுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதேபோல தமிழகத்தில் மின்தட்டுப்பாடு காரணமாக பல பள்ளிகளில் விடைத்தாள் திருத்தும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post