ஆங்கில வழி கல்வியில், மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தும் வகையில், இந்த மாதம் முதல், சேர்க்கையை நடத்த அரசு பள்ளிகள் தயாராகி வருகின்றன. கடந்த ஆண்டு முதல், அரசு பள்ளிகளில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில், ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பும், உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், ஆறாம் வகுப்பும் தொடங்கப்பட்டது.
ஒன்றியம் வாரியாக 50 சதவீத பள்ளிகள், ஆங்கில வழி கல்வியை ஆரம்பித்து கொள்ளலாம். பெரும்பாலான பள்ளிகள் விருப்பம் தெரிவிக்கவில்லை. தனியார் மெட்ரிக்., பள்ளிகள், ஏப்ரல், மே மாதமே, மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்து விடுகின்றன. ஆனால்,கடந்த ஆண்டு அரசு பள்ளிகள், ஜூனில் தான் சேர்க்கையை நடத்தின. 40 மாணவர்கள் சேர வேண்டிய, பெரும்பாலான பள்ளிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர் சேர்க்கை இருந்தது. வேறு வழியின்றி, தமிழ் வழி கல்வி பயில வந்த மாணவர்கள், ஆங்கில வழி கல்வியில், வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டனர். இதனால், இந்த ஆண்டு, தற்போதே ஆங்கில வழி கல்வியில் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவெடுத்துள்ளனர். அதற்கேற்ப, பள்ளிகளில், ஆங்கில வழி கல்விக்கு சேர்க்கை நடப்பதாக, தற்போதே அறிவிப்பு செய்து வருகின்றனர்.
Tags
kalvi news