500/500 மதிப்பெண்களை அள்ளிய மாணவர்கள் - இதுவரை இல்லாத சாதனை!

சென்னை: இந்தாண்டு, இதுவரை இல்லாத அளவில் புதிய சாதனையாக, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில், 500 மதிப்பெண்களை அப்படியே 3 மாணவர்கள் அள்ளியுள்ளனர்.
இவர்கள், தமிழை முதல் பாடமாக எடுத்துப் படிக்காதவர்கள். அவர்களில் 2 பேர் பெண்கள் மற்றும் ஒருவர் ஆண். அவர்களின் விபரம்,
துர்கா தேவி - டி.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மதுரை - 500/500.
ஹேம வர்ஷினி - வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, முகப்பேர், சென்னை - 500/500.
விஜயமூர்த்தி - ஜி.ஆர்.ஜி.எம். மேல்நிலைப் பள்ளி, கோவை - 500/500.
மாநிலத்தின் கல்வி வரலாற்றில், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பொறுத்தமட்டில், யாரும் முழு மதிப்பெண்களை அப்படியே வாங்கியதில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post