விழுப்புரம்: முன்னாள் படைவீரர்கள் இட ஒதுக்கீட்டின் கீழ் மேற்படிப்புக்கு விண்ணப்பம் செய்ய சான்று பெற்று பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் படை வீரர் நல அலுவலக உதவி இயக்குனர் மோகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: முன்னாள் படைவீரர்களைச் சார்ந்தோர்களுக்கு மருத்துவம், பொறியியல், டி.பார்ம், பி.பார்ம், பாலிடெக்னிக்கில் பட்டயப்படிப்புகள், பி.எஸ்.சி(நர்சிங்), பி.எஸ்.சி (விவசாயம்), பி.எட்., இந்திய மருத்துவம், பி.வி.எஸ்.சி, பி.எப். எஸ்.சி., ஆசிரியர் பயிற்சி, பட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு இடஒதுக்கீடு செய்துள்ளது.
இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திட முன்னாள் படை வீரர்கள் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சான்று பெற வேண்டும். இச்சான்று பெற முன்னாள் படைவீரரின் அசல் படை விலகு சான்று, இந்த அலுவலகத்தால் வழங்கிய அடையாள அட்டை, பள்ளி இறுதிச் சான்று, மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்று, இருப்பிடச் சான்று, கல்வி நிலையத்தில் பெறப்பட்ட விண்ணப்பம், வெள்ளைத் தாளில் முன்னாள் படைவீரரின் மனு ஆகியவற்றுடன் தங்களது மகன், மகளுடன் விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு நேரில் வந்து சான்று பெற்று பயனடையலாம்.
மேலும் பழைய சான்று இணைத்து அனுப்பும் விண்ணப்பங்கள் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழக கலந்தாய்வில் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முன்னாள் படை வீரர் நல அலுவலக உதவி இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.
Tags
kalvi news