தமிழக அரசே இன்று இருக்கும் சூழ்நிலையில் ஆசிரியர் படிப்புக்கு படித்தவர்கள் மிகவும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றனர். அவர்கள் வேறு வேலைக்கும் செல்ல முடியாத சூழ்நிலையில் இருக்கின்றனர். பத்து லட்சத்திற்கும் மேற்ப்பட்டோர் வேலைக்காக காத்திருக்கின்றனர்.
தனியார் பள்ளியில் 2000, 3000 என சொற்ப சம்பளம் வாங்குகின்றனர். இதை நீக்க என்ன செய்யலாம் என்ற ஆக்கப்பூர்வமான சிந்தனையில் ஈடுபட வேண்டும். எனக்கு தெரிந்து 2 வழிகள் இருக்கின்றது.
(1). 5ஆண்டுகளுக்கு தனியார் ஆசிரியர் பயிற்சி கூடங்களை தடை செய்து வைக்கலாம். ஏனென்றால் படித்தவர்களுக்கே வேலை கொடுக்க முடியாத நிலையில் மேலும் மேலும் லட்சகணக்கான இளைஞர் இளைஞிகளை ஆசிரியர் படிப்பு படிக்க வைத்து அவர்கள் வாழ்வை சீரழிக்க வேண்டாம். அந்த காலத்தில் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்றனர். இப்போது படிக்க வைத்தும் அடுப்பூத அனுப்பி விடவேண்டாம். ஏற்கனவே படித்து முடித்துள்ளவர்களுக்கு பணி நியமனம் செய்த பின் மீண்டும் தொடங்கலாம்.
(2). TET தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பணியிடங்களை நிரப்பியது போக மீதமுள்ளவர்களை தனியார் பள்ளிகளில் அரசாங்கமே கவுன்சிலிங் முறையில் பணியில் அமர்த்தலாம். சம்பளம் குறைந்தபட்சம் 10000 ரூபாய் கொடுக்கலாம். தனியார் பள்ளிகள் தாராளமாய் 10000 ரூபாய் கொடுக்க முடியும். அரசு பணி கிடைக்கும் வரை அவர்கள் அங்கேயே பணிபுரியலாம். தகுதியான ஆசிரியர்களை நியமித்தது போலவும் இருக்கும், மாணவர்களுக்கும் நல்ல கல்வியும் கிடைக்கும், ஆசிரியர் படிப்பு முடித்தவர்களுக்கும் குறைந்தபட்ச வருமானமும் கிடைக்கும்.அரசு ஏதாவது முடிவெடுக்குமா? ஆசிரியர் படிப்பு படித்தவர்களின் வாழ்வில் ஒழியேற்றுமா?
கணேசன் இராமசாமி
சேர்ந்தமரம்.
Tags
TRB NEWS