புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, 7 சதவீதம் உயர்த்தப்பட உள்ளதாக, மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 50 லட்சம் பென்ஷன்தாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில், 7 சதவீதம் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இதன் மூலம் அவர்களின் அகவிலைப்படி, தற்போதைய, 100 சதவீதத்தில் இருந்து, 107 சதவீதமாக உயர உள்ளது. எனினும், அகவிலைப்படி, 100 சதவீதத்தை தாண்டினால், உயர்த்தப்படும் அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை.
கடந்த பிப்ரவரியில், முந்தைய மன்மோகன் சிங் அரசு, 90 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை, 100 சதவீதமாக உயர்த்தியது. இப்போது, பணவீக்கத்தின் அடிப்படையில், கூடுதலாக, 7 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. இது, ஜூலை மாதம் முதல் உயர்த்தி வழங்கப்பட உள்ளது.எனினும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
Tags
DA