வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு : கோயம்பேட்டில் மறியல் செய்த 250 பட்டதாரி ஆசிரியர்கள் கைது


               தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்தது. அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு நடந்தது. 
 
           சுமார் 6 லட்சம் பேர் எழுதினர். இதில், 90க்கு மேல் மதிப்பெண் பெற்று சுமார் 23,000 பேர் தேர்ச்சி அடைந்தனர். இடஒதுக்கீடு அடிப்படையில் மேலும் 40,000க்கு மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், ஒவ்வொருவரின் பிளஸ் 2, இடைநிலை ஆசிரியர் தேர்வு, பட்டப்படிப்பு, பி.எட் மதிப்பெண்களுடன் தற்போது தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கூட்டும் வெயிட்டேஜ் முறையை அரசு கொண்டுவந்தது. இந்த முறையை பின்பற்றினால் கிராமப்புறங்களில் 20 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய கல்வித்தரத்தால் குறைவான மதிப்பெண்களை பெற்று, பல வருடங்கள் ஆசிரியர் கனவில் உள்ளவர்கள் ஆசிரியர் பணியில் சேர முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 27 நாளாக உண்ணாவிரதம், பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
           இந்நிலையில், கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே உள்ள தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்துக்கு வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்க நேற்று பட்டதாரி ஆசிரியர்கள் வந்தனர். அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தக்கூடாது என போலீசார் கூறினர். அதனால் ஆசிரியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையும் போலீசார் தடுக்கவே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர்கள் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதையடுத்து 250 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். இதில் 100 பேர் ஆசிரியைகள். அவர்களை மதுரவாயலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, தங்கள் போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post