தமிழக அரசின் சார்பில் 377 பேருக்கு நல்லாசிரியர் விருது

ஆசிரியர் தினத்தையொட்டி (செப்.5), தமிழக அரசின் சார்பில் இந்த ஆண்டு 377 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல் அந்தந்த மாவட்டங்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும்.

இந்த ஆண்டு தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் 201 ஆசிரியர்கள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் கீழ் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் 134 ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளிகளில் பணியாற்றும் 30 ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் பணியாற்றும் 2 ஆசிரியர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றும் 10 ஆசிரியர்கள் என மொத்தமாக 377 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுடன் ரூ.5 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்.

சென்னையில் வரும் 5-ஆம் தேதி நடைபெறும் விழாவில் ஆசிரியர்களுக்கு இந்த விருதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்க உள்ளார்

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post