தமிழக அரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர்கள்பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 827 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
அரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ளகணினி பயிற்றுநர்கள் பணியிடங்கள் ஏற்கனவே 625 இருந்தன. அத்துடன்கூடுதலாக 175 சேர்த்து 827 நியமிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர் இது தொடர்பாக உச்சநீதி மன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் தற்போது தமிழக அரசு ஆணைவெளியிட்டுள்ளது(அரசாணை எண் 130. தேதி 5.9.14) இந்த உத்தரவின் படி கணினி பயிற்றுநர் பணியிடங்கள் வேலை வாய்ப்பு பதிவு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களின் பட்டியல் பெறப்பட்டு நியமிக்கப்படும்.மேலும் பிஎட் தேர்ச்சி பெற்றிருப்பதும் அவசியம். ஏற்கனவே இந்த பணியிடங்களில பணியாற்றிய 625 கணினி பயிற்றுநர்கள் இந்த பணி நியமனத்தில் முன்னுரிமை கோரமுடியாது. மேலும், இனி வரும் காலங்களில் கணினி பயிற்றுநர்கள் நியமிக்கும் போது ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வு நடத்தியே தேர்வு செய்யப்படுவார்கள்.
Tags
TRB