பள்ளிகளில் நன்னெறிக் கல்வி கற்பிக்க வழக்கு : ஐகோர்ட் நோட்டீஸ்




பள்ளி, கல்லூரிகளில் நன்னெறிக் கல்வி கற்பித்தலை துவக்கி, மாணவர்களுக்கு ஆலோசனை மையங்கள் அமைக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மதுரை அண்ணாநகர் ராஜேந்திரன் தாக்கல் செய்த பொது நல மனு: பள்ளிகளில் முன்பு நாட்டுப்பற்று, கலாசாரம், நீதி, நேர்மையை கற்பிப்பது வழக்கம். துவக்கத்திலிருந்து கடமை, சகிப்புத் தன்மை, பெண்களை மதிப்பது பற்றி கற்பிக்க வேண்டும். தற்போது நன்னெறிக் கல்விக்கு (நீதி போதனை) முக்கியத்துவம்தருவதில்லை. பாடத்திட்டத்தில் உள்ளவற்றை கற்பிப்பதில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர். இதனால், சமூக முன்னேற்றம் தடைபட்டுள்ளது.நன்னெறிக் கல்வி இல்லாததால் மாணவர்கள் மத்தியில் அனைத் திலும் குற்றம், குறை காணும் தன்மை அதிகரித்துள்ளது. மேற்கத்திய கலாசாரம் நம் சமூகத்தில் ஊடுருவியுள்ளது.

இதனால், சமூகத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளன. திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. எத்திசையில் பயணிப்பது என மாணவர்கள் விழிபிதுங்குகின் றனர். சகிப்புத் தன்மை, சமத்துவம் ஏற்பட வேண்டுமெனில் சமூக மாற்றத்திற்கான கமிஷன் அமைக்க வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள்,கலெக்டர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் ஆலோசனை மையங்கள் உருவாக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் பள்ளி, கல்லூரிகளில் நன்னெறிக் கல்வியை, மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நன்னெறிக் கல்வி பெயரளவில் உள்ளது. சமூகமாற்றத்திற்கான கமிஷன் அமைத்து, பள்ளி, கல்லூரிகளில் நன்னெறிக் கல்வி கற்பிக்கும் பணியை துவக்க வேண்டும். ஆலோசனை மையங்கள் அமைக்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகாதேவன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் சாமிதுரை ஆஜ ரானார். உயர்கல்வித்துறை செயலாளர், சமூக நலத்துறை செயலா ளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தர விட்டனர்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post