பூலித்தேவன் பிறந்த நாள் விழா


சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவனின் 299-ஆவது பிறந்த நாள் விழா, அவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம், நெல்கட்டும்செவலில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.


இதில், பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் பங்கேற்று, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்கட்டும்செவலில் வசித்து வரும் பூலித்தேவனின் வாரிசான கோமதி முத்துராணி துரைச்சி முதலில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். இதையடுத்து, பாண்டியராஜா, மாமன்னர் பூலித்தேவர் நினைவு அறக்கட்டளை நிர்வாகிகளும், பூலித்தேவனின் வாரிசுகளுமான சி.சூரியபாண்டியன், கே.வி.துரை, எஸ்.பூலோகபாண்டியன், டி.கே.சண்முகசுந்தரபாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர்- தலைவர் டாக்டர் என்.சேதுராமன் பிற்பகல் 12.45 மணிக்கு நெல்கட்டும்செவலுக்கு கட்சி நிர்வாகிகளுடன் வந்து, பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, அவர் கூறுகையில், அடுத்தாண்டு பூலித்தேவனின் 300-ஆவது பிறந்த
நாளை அரசு விழாவாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் பூலித்தேவனுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம்
அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மூவேந்தர் முன்னேற்றக் கழக நிறுவனர்- தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தமது கட்சி நிர்வாகிகளுடன் வந்து, பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திவிட்டு பேசுகையில், பூலித்தேவன் பெயரில் தமிழக அரசு விருதுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் கதிரவன் எம்எல்ஏ, தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் ஜெயச்சந்திரத்தேவர், பசும்பொன் தேசியக் கழக நிறுவனர் என்.ஜோதி முத்துராமலிங்கம், முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர்- தலைவர் நடிகர் கருணாஸ், வீர விடுதலை முக்குலத்தோர் மக்கள் இயக்கத் தலைவர் விஜித்தேவர், அகில இந்திய தேவர் முன்னேற்றக் கழக மாநில துணைப் பொதுச் செயலர் செல்வம், மாநில விவசாய அணிச் செயலர் கருப்பையா, மாமன்னர் பூலித்தேவர் பாசறை மாநிலத் தலைவர் எஸ்.ராஜாமறவன் உள்பட சுமார் 25-க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பலத்த பாதுகாப்பு: மாவட்ட எஸ்.பி. நரேந்திரன்நாயர் தலைமையில், ஏடிஎஸ்பி சுதர்சனன், புளியங்குடி  டி.எஸ்.பி. வானுமாமலை உள்பட சுமார் 800 போலீஸார், வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் தி.காஜாமைதீன் தலைமையிலான தீயணைப்புப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post