ஒரு மெய் எழுத்துக்கு அடுத்து வேறொரு மெய்எழுத்து, உயிர்மெய் எழுத்துடன் வராமல் தனி மெய் எழுத்தாகவும் வருவது உண்டு. அவ்வாறு இரண்டு மெய் எழுத்துகள் சேர்ந்து வருவதை
ஈர்ஒற்று மயக்கம் என்று கூறுவர்.
இதில் 'ழ்' என்னும் மெய் எழுத்துக்குப் பின் 'ச்' என்ற மெய் எழுத்து வந்துள்ளது. இந்த 'ச்' என்னும் எழுத்து உயிர்மெய்யுடன் சேர்ந்து வராமல் தனி மெய் எழுத்தாகவே வந்துள்ளது.
ய், ர், ழ் என்னும் மூன்று மெய் எழுத்துகளை அடுத்து, க், ங், ச், ஞ், த், ந், ப், ம் ஆகிய மெய் எழுத்துகள் ஈர்ஒற்றுகளாகச் சேர்ந்து வரும்.