டிப்ளமோ நர்சிங்' கலந்தாய்வு தர வரிசை பட்டியல் வெளியீடு..

டிப்ளமோ நர்சிங்' கலந்தாய்வுக்கான, மாணவர்களின் தர வரிசைபட்டியலை, மருத்துவக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அடுத்த வாரத்தில், கலந்தாய்வு நடக்கும் என, தெரிகிறது. 
தமிழகத்தில், 23 நர்சிங் கல்லூரிகள் உள்ளன. இதில், இரண்டு ஆண்டு டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,000 இடங்கள் உள்ளன. இதற்கு, 8,200 பேர் வரை விண்ணப்பித்தனர். இதில், 8,101 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு உள்ளன. அடுத்த வாரத்தில், கலந்தாய்வு நடக்கும் என, தெரிகிறது. இந்த நிலையில், மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 வகுப்பில், அறிவியல் பிரிவு பிரிவு படித்தோர் 6,799 பேர்; நர்சிங் தொழில் பிரிவு படித்தோர் 589 பேர்; இதர பிரிவுகளில் படித்தோர் 713 பேர் என, மொத்தம், 8,101 பேர் இடம் பெற்றுள்ளனர். 'இதுபற்றிய விவரங்களை, tn.gov.in, ttn.health.org என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்' என, மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post