M.Ed. Regular: மாணவர் சேர்க்கைக்கு பொதுகலந்தாய்வு.

ஆன்லைனில் விண்ணப்பிக்க 10-ம் தேதி கடைசி பி.எட். படிப்பைப் போல, எம்.எட். படிப்பிலும் இந்த ஆண்டு பொது கலந்தாய்வு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கு வரும் 10-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். படிப்பில் சேரவேண்டும் என்றால், கடந்த ஆண்டு வரை ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இதனால், மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்களைப் போக்கும் விதமாக, பி.எட். படிப்பைப்போல எம்.எட். படிப்பிலும் இந்த ஆண்டு ஒற்றைச் சாளர முறையில் பொது கலந்தாய்வு முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள எம்.எட். இடங்கள் பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. கலந்தாய்வை தமிழ்நாடுஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடத்துகிறது. பி.எட். படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றுள்ள பட்டதாரிகள் எம்.எட். படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்ப நடைமுறைகள் தொடர்பான விவரங்களை ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்டது. 

இதன் முழு விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் (www.tnteu.in) விரிவாக தெரிந்துகொள்ளலாம். ஆன்லைனில்www.onlinetn.com இணையதளம் மூலம் வரும் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.300. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.175. இதை கேட்புக் காசோலையாக (டிடி) செலுத்த வேண்டும். ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் டிடி தொடர்பான விவரங்களை பூர்த்தி செய்யவேண்டும் என்பதால், முன்கூட்டியே டிடி எடுக்கவேண்டும். அதுமட்டுமின்றி, புகைப்படத்தையும் ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தில் கேட்கப்பட்ட விவரங்களை பூர்த்திசெய்து, ஸ்கேன் செய்யப்பட்ட போட்டோவை பதிவேற்றம் செய்து அதை பிரின்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த விண்ணப்பத்துடன், சுய சான்றொப்பம் இடப்பட்ட அனைத்துக் கல்விச் சான்றிதழ் நகல்கள், கட்டணத்துக்கான டிடி ஆகியவற்றையும் இணைத்து செப்டம்பர் 12-ம் தேதிக்குள் சென்னையில் உள்ள ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு பதிவு தபால், விரைவு தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பவேண்டும்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post