இடைநிலை ஆசிரியரின் தற்போதைய ஊதிய வழக்கின் நிலை -SSTA

   நேற்று (12.09.2014) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு எண் 33399/2013 விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஊதியம் பெறுவதற்கான வழிகாட்டுதல்(DIRECTION) பெற்றுள்ளதாக தற்போதுவரை விசாரித்த தகவல்
தெரிவிக்கின்றன. 
 
      அரசுக்கு இந்த வழிகாட்டுதல் குறித்து எந்தஒரு அறிவிப்பும் இல்லை.  இன்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் நீதிமன்றம் மற்றும் அரசு  தரப்பிலும் முழுமையான தகவல் பெற இயலவில்லை. நேற்று வழக்கில் பெற்ற வழிகாட்டுதலை(DIRECTION) அரசு  நடைமுறைபடுத்தாவிட்டால்  மீண்டும் இதே ஒருநபர் நீதிமன்றத்தில் விசாரனைக்கு வரும் என தெரிகிறது. இந்த வழிகாட்டுதலை(DIRECTION) அரசு  அமுல்படுத்தாவிட்டால் இருநீதிபதி அமர்விற்கு கொண்டு செல்ல முடியாது என்றும்  தெரிகிறது. அரசு தரப்பிலும் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதும் இதுவரை தெரியவில்லை. அரசு தரப்பில் இடைநிலை ஆசிரியரின் ஊதியம் 9300+4200 தர உயர்நீதிமன்றத்தில் ஒப்புகொண்டதாகவும் தெரியவில்லை. 8 வாரங்களுக்குள் அரசு  இந்த வழிகாட்டுதலை(DIRECTION) அமுல்படுத்தாவிட்டாலோ அல்லது ஒப்புக்கொள்ளாவிட்டலோ மீண்டும்  இதே ஒருநபர் நீதிமன்றத்தில் விசாரனைக்கு வரும் என தெரிகிறது. இந்த ஒருநபர் நீதிமன்றத்தில் வரும் பெரும்பான்மையான வழக்குகளில்  சட்டத்தில் இடமிருந்தால் செய்து கொடுங்கள் (" CONSIDERED  AS  PER LAW " ) என்று தான் வழிகாட்டுதல்(DIRECTION) தரப்படுகிறது .ஒரு வாரமோ 10 நாட்களுக்குப் பின்னர் தான் நீதிமன்ற  வழிகாட்டுதல்(DIRECTION) அரசிற்கு தரப்படும். அதன் பின்னர் தான்  இது குறித்த அரசு சார்பில் பதில் மனு அல்லது எதிர் தரப்பு வாதம் தாக்கல் செய்யப்படும் என்றும்  தெரிகிறது. இது வரை இவ்வழக்கில் அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ததாக விசாரித்த வரை தெரியவில்லை.

எது எப்படி ஆயினும் இடைநிலை ஆசிரியர்  ஊதிய  வழக்கில் முதல்படியை தாண்டி உள்ளமைக்கு SSTA  மனமார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் SSTA சார்பாக தொடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்  ஊதிய  வழக்கு எண்:4420/2014 இல் வழிகாட்டுதல்(DIRECTION) இல்லாமல் ஆணை (JUDGEMENT) பெறுவதற்காக  அனைத்து நடவடிக்கைகளும் விரைவு படுத்தப்பட்டுள்ளது. இன்னும் பல கட்டங்களை தாண்டி செல்லவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம். மேல் முறையீடு ஆனாலும் உச்ச நீதிமன்றம் சென்றாலும் SSTA இடைநிலை ஆசிரியர்  ஊதிய  வழக்கில் எந்தவித சமரசத்திற்கும் இடமளிக்காது ;  தொடர்ந்து போராடும். இடைநிலை ஆசிரியர்  ஊதியம்  கையில் (பணபலன் ) கிடைக்கும் வரை ஓயமட்டோம்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post