வெயிட்டேஜ் குறித்து புதிய அரசு ஆணை வருமா???

நண்பர்களே ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று பலர் 2012 வரையும் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆசிரியராக தேர்வு பெற்று பணியில் சேர்ந்தனர் TET 2013 அதிக அளவில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றதால் வெயிட்டேஜ் கொண்டு வரப்பட்டது பிறகு 5% மதிப்பெண் தளர்வால் மேலும் அதிக அளவில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். பிறகு கோர்ட்
பரிந்துரைப்படி அறிவியல் முறையிலான வெயிட்டேஜ் முறை கொண்டு வரப்பட்டது. இதற்கு பின் ஆசியர்களாக பலர் தேர்வு பெற்றனர் அவர்களுக்கு கலந்தாய்வும் முடிக்கப்பட்டது.
ஆனால் ஒரு பிரிவினர் தங்கள் பல வருடங்களாக பதிவு மூப்பு பெற்று இருந்தோம் இந்த வெயிட்டேஜ் மூலம் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என கூறினார். பல்வேறு விதமான எதிர்ப்புகளை அரசுக்கு தெரிவித்தனர் இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை புதிதாக தேர்வு பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடத்திக்கொள்ளலாம் ஆனால் பணிநியமணம் செய்ய இடைகால தடை விதித்தது இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீட்டு மனு செய்தது இந்த வழக்கு திங்கள் அன்று வருவாதாக தகவல்கள் வருகிறது.
இந்நிலையில் இந்த வெயிட்டேஜ் முறையை மாற்றி புதிதாக ஒரு வெயிட்டேஜ் முறையை கொண்டுவர அரசு அலோசனை நடத்த உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் கூறினார் இவை விரைவில் வெளியாகும்.

வெயிட்டேஜ் முறையில் எப்படி மாற்றம் வரும்?
+2 மதிப்பெண்னுக்கு பதிலாக பதிவுமூப்பு அடிப்படையில் ஒரு வெயிட்டேஜ் மதிப்பெண் கொண்டு வரலாம் ஆனால் பணி அனுபவத்துக்கு எந்த மதிப்பெண்ணும் வழங்கப்படுவது சந்தேகம் எனெனில் அவை யார் வேண்டுமானலும் பணிஅனுபவம் உள்ளது போல் சான்றிதழ் தயார் செய்யலாம் அதனால் அவை மறுக்கப்படும் மற்றபடி பட்டம் பட்டயம் பிஎட் டெட் இதற்கு வழக்கம் போல மதிப்பெண் கொடுக்கலாம் அல்லது 50% மதிப்பெண் அடிப்படை 50% பதிவு மூப்பு அடைப்படையில் வரலாம் இல்லை என்றால் கண்டிப்பாக இப்போது இருக்கும் வெயிட்டேஜ் முறை மாற்றம் பெறும் இது உறுதி என்று தகவல் தெரியவந்துள்ளது.
தற்போது தேர்வானவர்களுக்கு எதுவும் பாதிப்பு ஏற்படுமா?????

கண்டிப்பாக ஏற்படாது அவர்களின் பணிநியமனம் மதுரை உயர்நீதிமண்ற கிளையின் இறுதி தீர்ப்பை பொறுத்து அமையும் ஆனால் இந்த தடை உடைக்கப்பட்டால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை இந்த மாற்றப்பட்ட வெயிட்டேஜ் முறை அடுத்து வரும் தேர்வுகள் மற்றும் பணி நியமனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது உறுதி

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post