22 இந்திய மொழிகளின் மென்பொருளை இலவசமாக விநியோகிக்க தீவிர நடவடிக்கை:


             "22 இந்திய மொழிகளின் எழுத்துரு அடங்கிய மென்பொருளை இலவசமாக நாடு முழுவதும் விநியோகிக்கும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது' என்று மத்திய தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
            இது தொடர்பாக மக்களவை அதிமுக குழு தலைவரும், திருவள்ளூர் தொகுதி அதிமுக எம்.பி.யுமான டாக்டர் பி. வேணுகோபால் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு ரவிசங்கர் பிரசாத் எழுத்துப்பூர்வமாக திங்கள்கிழமை தாக்கல் செய்துள்ள பதில் வருமாறு:

"மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களான எம்டிஎன்எல் (மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட்), பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) ஆகியவை மூலம் கல்வி, சுகாதாரம், வங்கி, சமூக சேவை உள்ளிட்டவைகளை வழங்கும் திட்டம் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.

எம்டிஎல் (மில்லெனியம் டெலிகாம் நிறுவனம்) வளங்களைப் பயன்படுத்தி "பான் இந்தியா' திட்டத்தை உருவாக்குவது குறித்து பரிசீலிக்கும்படி பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு எம்டிஎன்எல் சார்பில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்காக எம்டிஎல் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை வாங்கும்படியும் பிஎஸ்எல் நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது, எம்டிஎல் திட்டத்தின்படி 22 இந்திய மொழிகள் அடங்கிய மென்பொருள் தொழில்நுட்பத்தை குறுத்தகடில் பதிவு செய்து அதில் அந்தந்த மொழிகளின் எழுத்துரு (ஃபாண்ட்ஸ்) சேர்க்கப்பட்டுள்ளன. இதை நாடு முழுவதும் இலசவமாக விநியோகிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இவை மட்டுமின்றி "பாரத் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சொல்யூஷன்ஸ்' எனப்படும் பிஓஎஸ்எஸ் அமைப்பின்படி "லைனக்ஸ்' அடிப்படையிலான மொழிகள் சார்ந்த மென்பொருளும் உருவாக்கப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது' என்று ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post