ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் பள்ளிக்கல்வித்துறை உத்

ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
click hereCM Cell Letter...
ஆசியர்கள் தகுதித் தேர்வு எழுதுவது கட்டாயம் என, கல்வித்துறை அறிவித்துள்ளது.தகுதித் தேர்வை ரத்து செய்யுமாறு கிருஷ்ணகிரியை சேர்ந்த ஆசிரியர் ஜோதி என்பவர் முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்திருந்தார். மனுவை பரிசீலித்த பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் ஜோதிக்கும், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும் விளக்க அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. மத்திய அரசின் 2009ம் ஆண்டு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், தேசிய ஆசிரியர் கல்விக்குழுமத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் தெளிவாக உள்ளது. அதன்படி, 6 முதல் 14 வயது வரையிலான மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.எனவே அனைத்து ஆசிரியர்களும் தகுதித் தேர்வு எழுத வேண்டும். இதில் எந்த விதிவிலக்கும் இல்லை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

1 Comments

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

  1. தங்கள் கருத்துக்களுக்கு நன்றி இதை போன்ற தகவல்களை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள் Latest Tamil News

    ReplyDelete
Previous Post Next Post