அனைத்து ஆசிரியர்களுக்கும் தொட்டுணர் கருவி வருகைப் பதிவேடு மற்றும் ஆசிரியர்களின் சொத்து விவரங்களை பணிப்பதிவேட்டில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முறையாக செயல்படுத்த பள்ளிக்கத்துறை இயக்குநர் உத்தரவு.

அனைத்து ஆசிரியர்களுக்கும் தொட்டுணர் கருவி வருகைப் பதிவேடு மற்றும் ஆசிரியர்களின் சொத்து விவரங்களை பணிப்பதிவேட்டில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முறையாக செயல்படுத்த பள்ளிக்கத்துறை உத்தரவு - இயக்குநர் செயல்முறைகள்.

பள்ளிக்கல்வித்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு / அரசு உதவிபெறும் / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியல்லாத பணியாளர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்களை சார்ந்த பணியாளர்களின் பணிப்பதிவேட்டில் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.

அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களின் சொத்து விவரங்களை பதிவேட்டில் பதிவிட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அசையும் அசையா சொத்து விவரங்களை பதிவேட்டில் தவறாமல் பதிவு செய்து பராமரிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சொத்து விவரங்களில் தவறு இருந்தால் ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சொத்து விவரங்களில் தவறு செய்திருக்கும் ஆசிரியர்கள் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post